அண்மை செய்திகள்
ஊரெல்லாம் நட்டுவின் பேச்சு தான், அவர் அப்படி என்ன செய்தார்?
இந்திய அணி-இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் நட்டுவின் பந்துகள் மூலம் ரசிகர்களின் மனதை ஈர்த்துள்ளார்.
நடராஜன் என்கிற நட்டு இந்தியாவின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்து வருகிறார். சில நாட்கள் கழித்து இப்போது மீண்டும் செய்திகளில் வருகிறார். காரணம் என்ன? இதோ பார்க்கலாம்.
இந்தியா-இங்கிலாந்து போட்டி
அண்மையில் நடைபெற்ற 3-ஆவது ஒரு நாள் போட்டியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முக்கியமான திருப்பமே கடைசி ஓவர் தான். ஒரு ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நட்டு களமிறங்கினார்.
நட்டுவின் துல்லியமான பந்துவீச்சே இந்தியாவின் வெற்றிக்கு காரணம். என்ன தான் கரன் ஆட்ட நாயகன் விருதை வாங்கினாலும், அவருடைய பேட்டியில் நட்டுவைப் பற்றி புகழ்ந்திருக்கிறார்.
இதையடுத்து இந்திய அணியின் கேப்டன், கோஹ்லி, நட்டுவின் யார்க்கர்களே இந்திய வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
நட்டுவைப் பற்றி இங்கிலாந்து வீரர் சாம் கூறியதாவது –
நட்டுவின் பந்துகள் அவருடைய திறனை வெளிப்படுத்தியது. மேலும், அதனை சமாளிப்பது கடினமாகவும் இருந்தது என்று ஒப்புக்கொண்டார். நட்டு சூப்பர் பவுலர் என்றும் புகழாரம் சூட்டினார்.
நடராஜனின் தன்னம்பிக்கை
ஊரெல்லாம் நட்டுவின் பேச்சாக இருந்தாலும், நட்டு ஒரு வித்தியாசமான கோணத்தில் இதற்கு பதில் அளிக்கிறார்.
"இந்திய அணியின் இந்த விளையாட்டை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. இதற்கு காரணம் – இந்திய அணியின் விடாமுயற்சியும், சகோதரத்துவமும் தான் மேலும் சாதிக்க வழி நடத்துகிறது."
தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் –
தொடர் வெற்றியை குவித்து வரும் நடராஜன், இந்திய கிரிக்கெட் அணியின் பொக்கிஷமே.