அண்மை செய்திகள்
காய்கறிகளை விற்ற மணிப்பூரின் முதல் எம்.எம்.ஏ தற்காப்பு வீராங்கணை
மணிப்பூரை சேர்ந்த தற்காப்பு வீராங்கணை (எம்.எம்.ஏ) ஜோஜோ ராஜ்குமாரி காய்கறிகளை விற்று தன் வருமானத்தை உயர்த்தினார்.
தற்காப்பு கலைகளை தேர்வு செய்யும் நபர்கள் குறைந்துக்கொண்டே வருகின்றனர். இதன் காரணம் – குறைவான வாய்ப்புகள் மற்றும் பணம் தேவைகள். மணிப்பூரின் சிறிய கிராமத்தை சேர்ந்த ஜோஜோ ராஜ்குமாரி, எம்.எம்.ஏ வீராங்கணையாக திகழ்வதற்கு முன்பு பல முயற்சிகளையும், தியாகங்களையும் செய்துள்ளார்.
அதிகாரப்பூர்வமாக 2018-ஆம் ஆண்டு, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் எம்.எம்.ஏ குழுவில் இணைந்துள்ளார். இதற்கு முன், அவர் பல இடையூறுகளைக் கடந்து வந்திருக்கிறார்.
தற்காப்புக்கலையும் வீட்டு சூழ்நிலையும்
ஜோஜோ 2007-ஆம் ஆண்டு கிக் குத்துச்சண்டை கற்றுக்கொள்ள தொடங்கினார். குடும்ப சூழ்நிலை இவருக்கு அவ்வளவு ஏதுவாக இல்லை. ஆனால் குடும்பத்தின் தேவைகளை ஒரு பக்கம் கவனித்து கொண்டு, தற்காப்பு கலையில் ஈடுபட்டு வந்தார்.
மாநில அளவு போட்டிகளில் ஈடுபட்டு வந்த இவர், குடும்பத்தில் பணத்தட்டுப்பாடு இருப்பதை அறிந்து முயற்சிகள் எடுத்து வந்தார். 2018-ஆம் ஆண்டு, கங்கிலெய்பாக் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் கிளப் என்னும் நிறுவனத்தின் மூத்த பயிற்சியாளர், ஃபிராங்க், ஜோஜோவை தன்னுடன் போட்டி போட அழைத்தா
ஃபிராங்கின் பயிற்சியில், மணிப்பூர் ஃபைட் லீக் போட்டியில், 2-1 என்னும் புள்ளிகளை பெற்றார். வீட்டின் தேவகளை பூர்த்தி செய்யும் விதமாக பருவத்திற்கேற்ப தொழில்களை செய்து வந்தார். வெயில் காலத்தில், பருத்தி ஆடைகளை விற்றார். அதே போன்று, குளிர் காலத்தில், கம்பளி துணிகளை விற்றுவந்தார்.
இவற்றை தவிர்த்து, சாலையோரக் கடையில் பக்கோரா மற்றும் காய்கறிகளை விற்று வந்தார். கடந்த வருடம் கொரோனா காலத்தில், இது போன்ற சிறு தொழில் செய்து தன் தற்காப்பு கலையயும், பயிற்சியையும் தொடர்ந்து வந்தார்.
இவருடைய தொடர் முயற்சிகளும், தற்காப்பு மீதுள்ள பற்றும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.