TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

இத்தாலியன் ஓபன்: முதல்நிலை ஜோடியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறிய போபண்ணா இணை

இத்தாலியன் ஓபன்: முதல்நிலை ஜோடியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறிய போபண்ணா இணை
X
By

Ashok M

Published: 17 Sep 2020 4:30 PM GMT

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா பங்கேற்றுள்ளார். இவர் கனடாவின் ஷப்வலோவுடன் இணைந்து விளையாடிகிறார்.

இந்தத் தொடரில் முதல் போட்டியில் போபண்ணா-ஷப்வலோவ் இணை 6-4,6-4 என்ற கணக்கில் கரின்-பேல்லா ஜோடியை தோற்கடித்தது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதல்நிலை ஜோடியான கோலம்பியாவின் ராபர்ட் ஃபரா- ஜூவன் கெபல் ஜோடியை எதிர்த்து போபண்ணா இணை களமிறங்கியது.

இந்தப் போட்டியின் முதல் செட்டில் சிறப்பாக விளையாடிய போபண்ணா ஜோடி 6-3 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் முதல்நிலை ஜோடி சுதாரித்து கொண்டு விளையாடியது. ஃபரா-கெபல் ஜோடி 6-3 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றை வென்றது.

இதனால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் சுற்று நடத்தப்பட்டது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போபண்ணா ஜோடி 10-5 என்ற கணக்கில் வென்றது. அத்துடன் 6-3,3-6,10-5 என்ற கணக்கில் தொடரின் முதல்நிலை ஜோடியை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

நாளை நடைபெற உள்ள காலிறுதிப் போட்டியில் பிரான்சு நாட்டின் சார்டி-மார்டின் ஜோடியை எதிர்த்து போபண்ணா-ஷப்வலோவ் ஜோடி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தனது 59ஆவது வயதில் முதல் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்த முதியவர்

Next Story
Share it