அண்மை செய்திகள்
விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய சென்னையின் எஃப்சி வீரர்கள்!
புதிதாக இயற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லை பகுதியில் விவசாயிகள் 75 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கடும் சூழலையும் பொருட்படுத்தாமல் போராடும் விவசாயிகளுக்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையின் எஃப்சி வீரர்கள் சிலர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சூசைராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “விவசாயிகளுக்கு ஆதரவு கொடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல அனிருத் தாபா, “நாம் மக்களாட்சி முறையில் செயல்பட்டு இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் ஜெர்மன்பிரீத் சிங், எட்வின் சிட்னி உள்ளிட்டோரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்கள் பதிவுகளை இட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் கிரிக்கெட் வீரர்களின் பதிவுகள் அதிக கவனத்தை ஈர்த்ததை போல் தற்போது கால்பந்து வீரர்களின் பதிவுகள் அதைவிட அதிகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Chennaiyin FC winning in odd season 💙 pic.twitter.com/8ioPsoHdvk
— Ragul Kumar (@ragulkumar143) February 4, 2021
மேலும் படிக்க: அரசியல் நோக்கத்திற்காக விளையாட்டு பிரபலங்கள் பயன்படுத்தப் படுகிறார்களா?