Featured
சென்னை டூ டோக்யோ - பவானி தேவியின் உத்வேகமூட்டும் பயணம்
யார் என்று தெரியாமல் இருந்த பவானி தேவி, இன்று உலகளவில் ஃபென்சிங்க் விளையாட்டில் முன் மாதிரியாக இருந்து வருகிறார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையிலிருந்து டோக்யோ செல்லும் வாய்ப்பு பவானி தேவிக்கு கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் பவானி தேவி, ஊர் பெயர் தெரியாத நபர். ஆனால், இப்போது முதல் இந்திய ஃபென்சராக ஒலிம்பிக்கிற்கு தேர்வாகி இருக்கிறார்.
பவானியின் உத்வேகமூட்டும் பயணம்
விளையாட பணமில்லாமல் வழி நடத்த ஆளில்லாமல், மூங்கில் கம்புகளுடன் தன் பயிற்சியை தொடங்கினார். ஃபென்சிங்க் விளையாட்டிற்கு தேவையான, வாளை வாங்க பணம் இல்லாததால், மூங்கில் கம்புகளை நாடினார். ஒரு சில நேரங்களில் தன் தாயின் நகைகளை அடகு வைத்து விளையாடியது உண்டு.
ஐந்து குழந்தைகளில் இளையவளான பவானி, தன் தாயின் வழிகாட்டுதலில் வளர்ந்தார். ரமணி, பவானியின் தாய், ஃபென்சிங்க் விளையாட்டை பரிந்துரைக்க காரணம் இது வித்தியாசமான ஒன்று. கோயில் அர்ச்சகராக இருந்த இவர் தந்தை, விளையாட்டிற்கு தேவையான ஆராயிரம் ரூபாயை கொடுக்க மிகவும் கடினப்பட்டார்.
பவானியின் வெற்றி பயணம்
ராகுல் டிராவிட் மென்டர்ஷிப் பயிற்சியின் மூலம், பவானி தேசிய அளவில் அடியெடுத்து வைத்தார். முதல் பத்து வருடம் கடினமாக இருந்தாலும், இவருக்கு தமிழ்நாட்டின் முன்னால் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா, ஊக்கத்தொகை கொடுத்து உதவினார்.
ஒரு பக்கம் மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்த பவானி, மற்றொரு பக்கம் அடுத்தடுத்த அகில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
இட்டாலில் பயிற்சியில் இருக்கும்போது தன் தந்தையின் இழப்பை அறிந்த பவானி நடுநடுங்கி விட்டார். ஆனால் கோவிட்-19 நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டு, அடுத்த போட்டிக்கு தயாரானார். இவருடைய உத்வேகமூட்டும் எழுத்து இதோ -
இப்போது நடந்து முடிந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கான ஃபென்சிங்க் தேர்வில், முதலில் தேர்ச்சி பெற்று இந்திய பெண் வீரர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்தார்.